வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 3 செப்டம்பர் 2016 (10:42 IST)

ரிலையன்ஸ் தொலை தொடர்பு நிறுவனம்: வெற்றியின் ரகசியம்

ஏர்டெல், வோடாபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் நேற்று வரையிலான பிரபல ஆப்ரேட்டர்களாய் நிலைத்திருந்தது, ஆனால் இன்றோ எங்கும் ரிலையன்ஸ. எப்படி ரிலையன்ஸ் இதை சாத்தியப்படுத்தியது. அதன் பலம் என்ன..?


 
 
22 ஸ்பெக்ட்ரம் மண்டலங்கள்: 
 
அனைத்து மண்டலங்களிலும் 4G ஸ்பெக்ட்ரம் கொண்ட ஒரே நிறுவனம் ரிலையன்ஸ். இப்போது வரையிலாக நெட்வொர்க் உள்கட்டமைப்பில் ரிலையன்ஸ் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.
 
2010-ஆம் ஆண்டு நடந்த ஏலத்தில் இந்தியா முழுவதிலும் உள்ள 22 ஸ்பெக்ட்ரம் மண்டலங்களிலும் ரிலையன்ஸ் ஜியோ தான் வெற்றி பெற்றது.  
 
4ஜி சேவை, நெட்வொர்க்: 
 
ஜியோவிற்கு அனைத்து 22 வட்டாரங்களிலும் 4ஜி சேவைகளை வழங்கும் திறன் உள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய 4ஜி நெட்வொர்க் ஆகும்.
 
ஆனால் பார்தி ஏர்டெல் 15 இடங்களிலும், ஐடியா 10 இடங்களிலும் மற்றும் வோடபோன் 8 இடங்களிலும் மட்டுமே வழங்க முடியும். 
 
கவரேஜ்: 
 
ஜியோ சுமார் 1.02 லட்சம் கிராமங்களை சென்றடைகிறது மற்றும் முதல் கட்ட நடவடிக்கையின் கீழ் 18,000 நகரங்களில் 4ஜி நெட்வொர்க் கவரேஜ் பெறுகிறது.
 
மொத்தம், 250,000-க்கும் அதிகமான கிமீ நீள உயர் தரமான கண்ணாடி இழை கேபிள், மற்றும் 90,000 சூழல்-நட்பு 4ஜி கோபுரங்கள் வரை ரிலையன்ஸ் நிறுவியுள்ளது.
 
ஒப்பந்தம்: 
 
பெரும்பாலான மற்ற நிறுவனங்களிடம், ரிலையன்ஸ் அளவிலான பைபர் நெட்வொர்க்குகளில் சொந்தமாக கிடையாது, ஒப்பந்தம் மூலமே பிற பைபர் நெட்வெர்க்களை பயன்படுத்தி சேவைகளை வழங்குகின்றன.
 
முதலீடு:
 
வெறும் முன்னோக்கு பற்றிய விஷயங்களை வைத்து மட்டுமே இந்த திட்டத்தில் ரூ.150,000 கோடி என்ற ஒரு மிகப்பெரிய முதலீட்டை செய்துள்ளது ரிலையன்ஸ்.
 
தொழில்நுட்பம்:
 
ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இரண்டு சர்வதேச நீர்மூழ்கி கேபிள் லேண்டின்ங் ஸ்டேஷன்கள் சொந்தமாக உள்ளது. மற்றும் சூழல் நட்பு டவர்கள், அழைப்பிகளை டேட்டாக்களாக்கும் வோல்ட் (VoLTE) தொழில்நுட்பம், புதுமையான அல்லது முன்மாதிரியான விலை.
 
இணைய வேகம்:
 
1 ஜிபிஎஸ் என்ற உச்சக்கட்ட இணைய வேகத்தை வழங்கும் தீவிர அதிவேக ஃபைபர் இணைப்பு திறன் என ஏர்டெல், வோடாபோன், ஐடியா போன்ற நிறுவனத்திடம் இல்லாத பல பலங்களை ரிலையன்ஸ் கொண்டுள்ளது.