ஐந்தை சேர்த்து ஐம்பதை கைகழுவும் ஸ்டேட் பேங்க்: அதிர்ச்சியில் ஊழியர்கள்!!
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுடன் அதன் ஐந்து துணை வங்கிகளை இணைத்துக்கொண்டு, ஐம்பது கிளை வங்கிகளை மூட முடிவு செய்துள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் துணை வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டியாலா மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகனெர் & ஜெய்பூர் ஆகிய ஐந்து வங்கிகளையும், பாரதிய மகிளா வங்கியையும் இணைக்க முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ள நிலையில் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இந்த ஐந்து துணை வங்கிகளையும் எஸ்.பி.ஐ. வங்கியுடன் இணைக்கப்படவுள்ளது.
எஸ்.பி.ஐ வங்கி தனது கிளை வங்கிகளை ஒன்றிணைப்பதன் மூலம் இந்த வங்கிகளின் தலைமை அலுவலகம் உள்பட 50 சதவிகித கிளைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளை இணைப்பதன் மூலம் 1,107 ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயமும் உள்ளது.