வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 6 அக்டோபர் 2016 (10:52 IST)

ரிலையன்ஸ் ஜியோ முக்கிய ஐந்து பிரச்சைனைகளும், அதன் தீர்வுகளும்

ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டுகளுக்கான தட்டுப்பாடு நிலவி வருகின்றது. ஏற்கனவே சிம் கார்டு வாங்கிப் பயன்படுத்துவோர் குறைவான வேகம், கால் டிராப் உள்ளிட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். 

 
ரிலையன்ஸ் ஜியோ சேவைகளில் பல்வேறு கோளாறுகள் ஏற்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கும் நிலையில், அதிகம் ஏற்படும் ஐந்து பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளையும் தெரிந்துகொள்ளுங்கள்.
 
1. ஜியோ சிம் சரியாக வேலை செய்யவில்லை: 
 
தீர்வு: முதலில் ஜியோ சிம் சப்போர்ட் செய்யும் 4ஜி கருவியினை வைத்திருக்க வேண்டும். ஒரு வேலை 3ஜி போன் வைத்திருக்கும் பட்சத்தில் அதிலும் ஜியோ சிம் பயன்படுத்த முடியும். ஆனால் அனைத்து ஜியோ சலுகைகளையும் பெற முடியாது. 
 
2. டூயல் சிம் ஸ்மார்ட்போன்களில் வேலை செய்யவில்லை:
 
பெரும்பாலான பயனர்களும் டூயல் சிம் கொண்ட தங்களது ஸ்மார்ட்போன்களில் ஜியோ சிம் சரியாக வேலை செய்யவில்லை எனக் குற்றம் சாட்டி வருகின்றனர். 
 
தீர்வு: ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை பிரைமரி சிம் கார்டு ஸ்லாட்டில் பொருத்த வேண்டும். இவ்வாறு செய்வதால் சீரான ஜியோ சேவையினை பெற முடியும்.
 
3. ஜியோ சிம் பெயர் காட்டவில்லை: 
 
சில பயனர்கள் தங்களது கருவியில் ஜியோ சிம் பெயரே காட்டவில்லை எனத் தெரிவித்துள்ளனர். 
தீர்வு: இந்த பிரச்சனைக்கு சிம் கார்டினை கழற்றி, மீண்டும் பொருத்திப் பார்க்க வேண்டும். 
 
4. சிக்னல் கிடைக்கவில்லை: 
 
ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டு பெயர் தெரிந்தும், கருவியில் ஜியோ சிக்னல் கிடைக்கவில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.
 
தீர்வு: இதற்கு Settings → Mobile Networks → Preferred Network Type சென்று LTE only ஆப்ஷனினை கிளிக் செய்ய வேண்டும்.
 
5. ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம் கார்டு மூலம் சில சமயங்களில் அழைப்புகளை மேற்கொள்ள முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
 
தீர்வு: இது டெலி-வெரிபிகேஷன் நிறைவடையாததால் ஏற்படலாம். ஜியோ 4ஜி சிம் மூலம் அழைப்புகளை மேற்கொள்ள ஜியோஜாயின் ஆப் பயன்படுத்தலாம்.