வந்தாச்சு ஸ்னாப்டீல் கோல்டு: ஸ்னாப்டீல் புது திட்டம்
அமேசான் நிறுவனம் ப்ரைம் என்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனம் அஷ்யூர்டு என்றும் பிரீமியம் உறுப்பினர் சேவைகளைத் தொடர்ந்து ஸ்னாப்டீல் நிறுவனம் ஸ்னாப்டீல் கோல்டு என்ற சேவையை துவக்கி உள்ளது.
ஸ்னாப்டீல் கோல்டு சேவை வாயிலாக ஸ்னாப்டீல் வாடிக்கையாளர்கள் இலவச டெலிவரி, இலவச ஒரு நாள் டெலிவரி மற்றும் நீட்டிக்கப்பட்ட பாதுகாப்பான வாங்குதல் வழிமுறைகளைப் பெறலாம்.
இதில் உள்ள இன்னொரு சிறப்பு என்னவென்றால், ஸ்னாப்டீல் நிறுவனம் நெட் பேங்கிங், கிரெடிட் / டெபிட் கார்டு, ஈஎம்ஐ அல்லது வால்லெட் சேவைகளைப் பயன்படுத்தி புக் செய்பவர்களுக்கும் இலவச சேவையை அறிவித்துள்ளது.
2010 ஆண்டு துவங்கப்பட்ட ஸ்னாப்டீல் நிறுவனம் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட விற்பனையாளர்களுடன், 50 மில்லியன் பொருட்களுடன், 1000 வகைகளுடன், 6000 நகரங்களில் தனது டெலிவரியை மற்றும் விற்பனையைச் செய்து வருகிறது.