1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 30 ஜனவரி 2017 (11:50 IST)

தபால் துறைக்கு ஆர்.பி.ஐ. வழங்கிய அதிகாரம்: எதற்கு?

இந்திய தபால் துறை பேமண்ட் வங்கியை துவங்குவதற்கான அனுமதியை இந்திய ரிசர்வ் வங்கி வழங்கியிருக்கிறது.


 
 
பேமண்ட் வங்கி என அழைக்கப்படும் சிறிய அளவிலான வங்கி சேவையை துவங்குவதற்கான கடைசிக்கட்ட அனுமதியை இந்திய ரிசர்வ் வங்கி தபால் துறைக்கு வழங்கியிருக்கிறது. 
 
சோதனை முறையில் ராஞ்சி மற்றும் ராய்ப்பூரில் இன்னும் ஒரு வாரத்தில் தபால் துறை சார்பில் பேமண்ட் வங்கிகள் திறக்கப்படும் என்று தெரிகிறது.
 
பேமண்ட் வங்கிகள் துவங்குவதற்கான அனுமதியை 15-க்கு மேற்ப்பட்ட நிறுவனங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி வங்கியுள்ளது. இதில் பிரபல தொலை தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் நிறுவனமும் ஒன்று.
 
பேடிஎம் நிறுவனமும் கூடிய விரைவில் பேமண்ட் வங்கி சேவையை துவங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.