1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya
Last Modified: வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (13:19 IST)

ரிலையன்ஸ் நிறுவனத்தின் அடுத்த புரட்சிகர திட்டம் கார் இன்ஸ்யூரன்ஸ்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் அடுத்த புரட்சிகர திட்டம் கார் இன்ஸ்யூரன்ஸ்

பெரிய விஷயங்களை கூட அனைவருக்கும் எளிய வகையில் கிடைக்கச் செய்வதில் ரிலையன்ஸ் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் அடுத்த திட்டம் கார் இன்ஸ்யூரன்ஸ்.


 


இன்டர்நெட் இணைப்பாடுகளை போட்டியாளர்களைவிட பன் மடங்கு குறைவான விலையில் தந்து புரட்சியை படைத்த நிறுவனம் ரிலையன்ஸ்.

அதே வகையில், தற்போது கார் இன்ஸ்யூரன்ஸ் துறையிலும் ரிலையன்ஸ் ஒரு புரட்சிகர திட்டத்துடன் களமிறங்கியிருக்கிறது. காருக்கு இன்ஸ்யூரன்ஸ் போடுவதற்கான நடைமுறைகள், கால விரயம் போன்றவை வாடிக்கையாளர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தும் விஷயங்களாக இருக்கின்றன.

இந்த நடைமுறை பிரச்னைகளை போக்கி, இருந்த இடத்திலிருந்தே சில நொடிகளில் கார் இன்ஸ்யூரன்ஸ் பெறும் புரட்சிகர திட்டத்தை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

ரிலையன்ஸ் ஜெனரல் கார் இன்ஸ்யூரன்ஸ் என் இந்த புதிய இன்ஸ்யூரன்ஸ் திட்டம் பெயரிடப்பட்டுள்ளது. மொபைல்போன் நம்பர், இ-மெயில் முகவரி மற்றும் உங்களது காரின் பதிவு எண்ணை ஆன்லைன் மூலமாக தந்தால் உங்கள் காருக்கான இன்ஸ்யூரன்ஸ் விரைவாக உங்கள் கைக்கு கிடைத்துவிடும்.