புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 2 ஏப்ரல் 2020 (13:45 IST)

ஸ்மார்ட்போன் விலையை கூட்டிய Realme: லிஸ்ட் இதோ...

ரியல்மி நிறுவனம் தனது சில ஸ்மார்ட்போன்களின் விலையை உயர்த்தி அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
 
இந்தியாவில் ஏப்ரல் 1 முதல், புதிய ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் காரணமாக, ஸ்மார்ட்போன்களில் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அந்த வகையில் ரியல்மி தனது ஸ்மார்ட்போன் விலையை உயர்த்தியுள்ளது. 
 
ஸ்மார்ட்போன் விலை உயர்வு பட்டியல் இதோ... 
 
ரியல்மி 6 Pro: பழைய விலை ரூ.16,999; புதிய விலை ரூ.17,999
ரியல்மி 6: பழைய விலை ரூ.12,999; புதிய விலை ரூ.13,999
ரியல்மி  5i: பழைய விலை ரூ.8,999; புதிய விலை ரூ.9,999
ரியல்மி  C3: பழைய விலை ரூ.6,999; புதிய விலை ரூ.7,499
ரியல்மி X2: பழைய விலை ரூ.16,999; புதிய விலை ரூ.17,999
ரியல்மி X2 Pro: பழைய விலை ரூ.29,999; புதிய விலை ரூ.29,999
ரியல்மி X2 Pro Master Edition: பழைய விலை ரூ.34,999; புதிய விலை ரூ. 36,999