வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 11 ஏப்ரல் 2018 (15:08 IST)

மக்கள் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்வதில்லை - ரிசர்வ் வங்கி தகவல்

மக்கள் பணத்தை வங்கி கணக்கில் இருந்து எடுக்கும் அளவிற்கு டெபாசிட் செய்வதில்லை என்று ரிசர்வ் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
கருப்பு பணம் ஒழிப்பு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாடு முழுவதும் அரங்கேறியது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். டிஜிட்டல் சேவைக்கான கட்டண்மும் தற்போது அதிகரித்து வருகிறது. 
 
இதனால் மக்கள் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்வது குறைந்து வருகிறது. வங்கி அதிகாரிகள், ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு புதிய நோட்டுகளை அச்சிட்டு வழங்காததால் பணத் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
 
இதன் காரணமாகவே ஏடிஎம்க்கள் மூடப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ள காரணம் அதிர்ச்சியளித்துள்ளது. மக்கள் வங்கியில் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கும் அளவிற்கு டெபாசிட் செய்வதில்லை என்றும் இதனால் பண நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
 
இதனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. பண புழக்கம் மக்களிடத்தில் மீண்டும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.