செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 25 ஜூலை 2017 (19:29 IST)

32 ஆண்டுகளாய் இருந்த எம்எஸ் பெயின்ட் நீக்கம்: மைக்ரோசாப்ட் அறிவிப்பு!!

விண்டோஸ் 10 அப்டேட்டில் இருந்து நீக்கப்படும் அம்சங்களில் பெயின்ட் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


 
 
விண்டோஸ் இயங்குதளத்தில் 32 ஆண்டுகளாய் இடம்பிடித்துள்ளது பெயின்ட். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 1.0 பதிப்பில் இருந்து இன்றுவரை பெயின்ட் இருந்து வருகிறது. 
 
ஆனால் இனி அவ்வாறு இருக்காது என தெரிகிறது. மேலும் வெளிவரும் அப்டேட்களில் இருந்து பெயின்ட் நிரந்திரமாக நீக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.  
 
மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 கிரியேட்டர்ஸ் அப்டேட்டில் 3D பெயின்ட் அறிமுகம் செய்யப்பட வாய்புகள் உள்ளதாகவும் தெரிகிறது.