1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (19:05 IST)

பக்கத்து வீட்டுக்காரன் மிஸ்ஸிங்... ஏர்டெல், வோடபோனை பங்கமா வெச்சி செஞ்ச ஜியோ!

நேற்று காதலர் தினம் கொண்டப்பட்டது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் காதலர் தினத்தை கொண்டாடியுள்ளது. ஆனால், இந்த கொண்டாட்டம் ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற மற்ற நிறுவனங்களை கலாய்க்கும் விதமாக உள்ளது. 
 
கடந்த 2016 ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு துறையில் அறிமுகமான ரிலையன்ஸ் ஜியோ வந்த வேகத்தில் அனைத்தையும் இலவசமாக வழங்க மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்கள் அனைவரும் ஜியோவின் வாடிக்கையாளர்களாக மாறினர். 
 
மேலும், தனது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள பல சலுகைகளை வழங்கியது. இதனால், வாடிகையாலர்கள் ஜியோவை முதல் சிம் தேர்வாக வைத்து மற்ற நெர்வொர்க் சிம்மை இரண்டாம் சிம்மாக பயன்படுத்த துவங்கினர். 
அதிலும் இப்போதெல்லாம் கிட்டத்தட்ட அனைத்து ஸ்மாட்போன்களிலும் 4G வசதி சிம் 1-ல் மட்டுமே கொடுக்கப்படுகிறது. இதனை மனதில் வைத்து “ஒரு காலத்தில் சிம் 2 இடத்தில் இருந்தீர்களே? இப்போது எங்கே இருக்கிறீர்கள்” என்று ஜியோ டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு காதலர் தின வாழ்த்தை தெரிவித்துள்ளது.