மார்ச் 31, 2018 வரை கூடுதல் இலவச டேட்டா: ஜியோ அடுத்த அதிரடி!!


Sugapriya Prakash| Last Modified திங்கள், 10 ஜூலை 2017 (21:26 IST)
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவரரும் வண்ணம் கூடுதலாக 10GB இலவச டேட்டா சலுகையை அறிவித்துள்ளது.

 
 
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இலவசங்களுடன் தனது முதல் அறிமுகத்தை துவங்கியது. பின்னர், ஏப்ரல் மாதம் முதல் கட்டணங்களை வசூலிப்பதாக அறிவித்து அதிலும் பல இலவசங்களை வழங்கியது. 
 
இந்நிலையில், மேலும் புதிய வாடிக்கையாளர்களை கவர Asus ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா சலுகையை அறிவித்துள்ளது.
 
Asus ZenFone Selfie, Asus ZenFone Max, Asus ZenFone Live, Asus ZenFone Go 4.5, Asus ZenFone Go 5.0, மற்றும் Asus ZenFone Go 5.5 ஆகிய மொபைல் மாடல்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது.
 
Asus மொபைல் வாங்கியதும் ஜியோ சிம் கார்டு வாங்கி, ப்ரைம் உறுப்பினராக இணைய வேண்டும். பின்னர், ரூ.309-க்கு ரீசார்ஜ் செய்தால் தினசரி 1GB டேட்டா மற்றும் 10GB கூடுதல் டேட்டாவை மார்ச் 31, 2018 வரை பெறலாம் என அறிவித்துள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :