1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: வெள்ளி, 7 அக்டோபர் 2016 (13:58 IST)

ஆப்பிள் ஐபோன் 7 இன்று இந்தியாவில் அறிமுகம்

ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் இன்றுமுதல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.


 

 
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உலக அலவில அதிக மக்களால் பயன்படுத்தப்படுகிறது. ஐபோன் என்றாலே அதுக்கு தனி மரியாதை உண்டு. ஆப்பிள் நிறுவனத்தில் பொருட்கள் எல்லாமே விலை உயர்வாக விறகப்படுகிறது.
 
இருந்தாலும் அந்த ஆப்பிள் என்ற பெயருக்கே அனைவரும் அதை விரும்புகின்றனர். அதோடு விலை ஏற்ற அதன் பயன்பாடு உள்ளது. அதைக்கொண்டு ஏராளமான செயல்கள் பாதுக்காப்பான முறையில் செய்யலாம்.
 
இந்தியாவில் ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் பெரிய வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் இன்றுமுதல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.
 
தற்போது ஐபோன் 6, போலவே ஐபோன் 7 மொபைல் போனும் இந்திய மக்களிடையே நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்நுட்ப நீதியான மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் நிச்சயமாக இந்த ஐபோன் 7 மாடலை விரும்பி வாங்குவார்கள்.
 
இந்த ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் மாடல் மொபைலில் ஆப்பிள் 10 இயக்குதளத்தில் இயங்கக்கூடியது. அதோடு பின்புற கேமரா இரட்டை லென்ஸ் கொண்டது என்பதால் புகைப்பட விரும்பிகளுக்கு இது விருந்து படைக்கும்.
 
இந்திய சந்தையில் ஐபோன் 7 32GB, 128GB, 256GB என மூன்று விதமான சேமிப்பு வசதியுடன் களமிறங்கியுள்ளது. 32GB ஐபோன் 7 மாடல் ரூ.60,000-க்கும், 128GB ஐபோன் 7 மாடல் ரூ.70,000-க்கும், 256GB ஐபோன் 7 மாடல் ரூ.80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 
 
ஐபோன் 7 பிளஸ் மாடல் ஒவ்வொன்றும் ஐபோன் 7 மாடலைவிட ரூ.12,000 அதிக விற்பனை செய்யப்படுகிறது.