வரலாற்றில் முதல்முறையாக வீழ்ச்சியை சந்தித்த ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் சரிவை சந்தித்ததன் மூலம் வரலாற்றில் முதல்முறையாக விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
ஸ்மார்ட்போன் சந்தையில் யாரும் அசைக்க முடியாத அளவிற்கு கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து முதல் இடத்தில் இருந்தது ஆப்பிள் நிறுவனம். அனைவராலும் விரும்பப்படும் ஸ்மாட்ர்போன் ஆப்பிள் ஐபோன்கள்.
தற்போது வரலாற்றில் முதல்முறையாக ஸ்மார்ட்போன் சந்தையில் சரிவை சந்தித்துள்ளது. இதனால் விற்பனையில் சரிவை சந்தித்துள்ளது. நடப்பு ஆண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்கள் விற்றதன் மூலம் 215.6 பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டியுள்ளது அந்நிறுவனம்.
இது கடந்த ஆண்டை விட ஒப்பிடும்போது 8.1 சதவீதம் குறைவாகும். இந்த சரிவின் காரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் நிகர லாபம் 45.7 பில்லியன் டாலர் அளவுக்கு குறைந்துள்ளது.