திங்கள், 15 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 4 ஜனவரி 2017 (18:23 IST)

இந்தியாவின் தீர்வு உலகத்துக்கே தீர்வு: சுந்தர் பிச்சை

இந்தியாவின் தீர்வு உலகத்துக்கே தீர்வு: சுந்தர் பிச்சை
இந்தியா வந்துள்ள கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை  இந்தியாவில் ஒரு பிரச்னைக்கு தீர்வு கண்டால், உலகுக்குத் தீர்வை கண்டுவிடலாம் என்று கூறியுள்ளார்.


 

 
இந்தியா வந்துள்ள கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை டெல்லியில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.
 
அவர் கூறியதாவது:-
 
கடந்த 18 ஆண்டுகளாக எவ்வளவு மக்களுடன் தொடர்பு ஏற்படுத்த முடியும் என்பதையே இலக்காக வைத்துள்ளது கூகுள். அதற்கு ஆண்ட்ராய்டு போன்ற தளங்களை பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகிறோம். இந்தியாவில் ஒரு பிரச்னைக்கு தீர்வு கண்டால், உலகுக்குத் தீர்வை கண்டுவிடலாம், என்று கூறினார்.
 
இந்நிகழ்ச்சியில், மை பிஸ்னஸ் (My Business) என்ற புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுமூலம் 10 நிமிடத்தில் சிறு தொழிலுக்குத் தேவையான இணையதளத்தை உருவாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.