முதலையுடன் சண்டையிட்டு தோழியை மீட்ட சிறுமி : வைரல் வீடியோ

zimbabwe
sinojkiyan| Last Modified வியாழன், 31 அக்டோபர் 2019 (15:53 IST)
பாம்பைக் கண்டால் படையும் நடுங்குவதுபோல் ஆற்றில் இருக்கும் முதலையைக் கண்டால் எல்லாரும் அரண்டுதான் போவார்கள் . இந்நிலையில் ஜிம்பாவே நாட்டில் தோழிகள் ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது லடொயா என்ற தோழியை முதலை ஆற்றில் பிடித்துக்கொண்டு போக, ரெபேக்கா என்ற பெண் முதலையுடன் போராடி அவரை மீட்டுள்ளார். இந்த செய்தி உலகெங்குக வைரலாகி வருகிறது.
ஜிம்பாவே நாட்டில்  சிண்ட்ரெல்லா  என்ற கிராமத்தில் உள்ள ஆற்றில்  9 வயது பெண், லடொயா முவாமி மற்றும் அவது தோழிகள் ஆற்றில் குளிப்பதற்காக சென்றனர்.
 
இந்நிலையில் முவாமி முதலில் ஆற்றில் குளித்துக்கொண்டிருக்கும்போது  ஒரு முதலை அவரை ஆற்றுக்குள் இழுத்துச் சென்றது. அப்போது அவர் கூச்சலிடவே, உடன் இருந்த தோழி ரெபேக்கா முன்கோவோமி என்பவர் ஆற்றில் குதித்து, அந்த முதலையுடன் போராடி பத்திரமாக லடோயாவை மீட்டார். 
 
இதில், லயோடாவுக்கு சிறிது காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
 
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன். சிறுமி ரெபேக்காவின் திறமை, துணிச்சலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :