ஃபிளிப்கார்ட்டுடன் கைகோர்க்கும் கல்யாண் ஜூவல்லர்ஸ்


Suresh| Last Modified வியாழன், 11 பிப்ரவரி 2016 (14:57 IST)
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நகைக்கடைகள் நடத்தி வரும் கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம் இணைய வழி வணிக நிறுவனமான ஃபிளிப்கார்ட் உடன் இணைந்துள்ளது.

 

 
இணையதளங்களின் மூலம் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது, தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. பலதரப்பட்ட பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
 
இந்நிலையில், கல்யாண் ஜூவல்லர்ஸ்  தயாரிக்கும் ரூ. 3500 முதல் ரூ. 2 லட்சம் வரைடியலான தங்க நகைகள் இனி ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இணையதளங்கள் மூலம் நடைபெறும் நகை விற்பனை அதிகரித்து வரும் நிலையில், கல்யாண் ஜூவல்லர்ஸ் தயாரிக்கும் நகைகள் இனி இணைய வழி விற்பனை மையான ஃபிளிப்கார்ட் மூலம் விற்பனை செய்யப்படும்.
 
இந்த விற்கபனை நாளை (பிப்ரவரி 12) முதல் இந்த விற்பனை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :