புதன், 4 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 10 மார்ச் 2017 (10:36 IST)

கூடுதல் கட்டணம் இல்லாமல் பணபரிவர்தணை செய்ய வேண்டுமா?

மத்திய அரசு ஆதார் பேமெண்ட் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இது வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான சேவைகளாகும். 


 
 
மேலும் இது கைரேகை அங்கீகாரம் பெற்று அளிக்கக் கூடிய ஒரு பாதுகாப்பான சேவையாகும். இதற்கு வங்கி கணக்குகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். 
 
இதற்கான ஆண்ட்ராய்டு செயலியை ஐடிஎப்சி வங்கி அரசுத் துறை நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கியுள்ளது. இந்த ஆதார் பேமெண்ட் செயலியினால் கார்டு பரிவர்த்தனைகள் போன்று  கூடுதல் கட்டணங்கள் ஏதும் இருக்காது. 
 
இதுவரை 40 கோடி வங்கி கணக்குகள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள வங்கி கணக்குகளை ஆதார் எண்ணுடன் இணைக்க 2017 மார்ச் 31 வரை கலா வரம்பை அறிவித்துள்ளது மத்திய அரசு.
 
ஆதார் பேமெண்ட் செயலி பயன்கள்/ தேவைகள்: 
 
# பரிவர்த்தனையின் போது சேவை வரி மற்றும் கூடுதல் கட்டணங்கள் இல்லை. 
 
# டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் தேவையில்லை. 
 
# ஆதார் எண் அவசியம்.
 
# ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைத்து இருக்க வேண்டும்.
 
# ஆனால், ஒரு தனிநபரிடம் இருந்து மற்றொருவருக்குப் பணத்தை அனுப்பிப் பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.