ஆக்சிஸ் வங்கியுடன் போட்டி போட்டு மூக்கை உடைத்து கொண்ட அமேசான்!!
ப்ரீ சார்ஜ் நிறுவனத்தை கைப்பற்ற ஆக்சிஸ் வங்கியுடன் போட்டியிட்ட அமேசான் நிறுவனம் தோல்வியை சந்தித்துள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் வேலெட் மற்றும் பேமெண்ட் சேவைகள் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. பேடிஎம் நிறுவனத்திற்குப் போட்டியாக விளங்கிய ப்ரீ சார்ஜ் நிறுவனத்தை 2015 ஆம் ஆண்டு ஸ்னாப்டீல் நிறுவனம் கைப்பற்றியது.
ஆனால், ஸ்னாப்டீல் தொடர் வர்த்தகச் சரிவை சந்தித்ததால் மொத்த நிறுவனத்தையும் விற்பனை செய்ய முடிவு செய்தது. ப்ரீ சார்ஜ் நிறுவனத்தை வாங்க அமேசான் மற்றும் அக்சிஸ் போட்டி போட்டது.
இதில், ஆக்சிஸ் வங்கி மொத்த நிறுவனத்தையும் சுமார் 385 கோடி ரூபாய்க்குக் கைப்பற்ற உள்ளது. இதன் மூலம் அக்சிஸ் நிறுவனத்தின் ரீடைல் சேவையில் புதிய வர்த்தக விரிவாக்கம் இருக்கும் என தெரிவித்துள்ளது.