ஜியோ புகழ் அம்பானியின் அடுத்தகட்ட அதிரடி ப்ளான் இதுதானோ!!
ஜியோ 4ஜி சேவை தொடர்ந்து விரைவில் டிடிஎச் சேவை, மலிவான 4ஜி கருவிகள் இவை இல்லாமல் முகேஷ் அம்பானியின் அடுத்த மாஸ்டர் பிளான் ரெடியாகி உள்ளது.
அதன் படி ரிலையன்ஸ் ஜியோ ஆனது ஜியோ கார் இணைப்பு சேவை ஒன்றை ஓபிடி எனப்படும் ஆன் போர்ட் டையாக்னைசிஸ் தொழில்நுட்பத்தின் கீழ் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
மேலும் இந்த திட்டத்தின் கீழ் 2020 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள 90% கார்களை இண்டர்நெட் மூலம் இணைக்க ரிலையன்ஸ் ஜியோ குழு திட்டமிட்டுள்ளது.
இந்த சேவையின் மூலம் எரிபொருள் இன்ஜெக்ஷன், ஆக்ஸிஜன் சென்சார்கள் மற்றும் கார்களுக்கான துணை அமைப்பை எளிதில் அணுக முடியும்.
இது சார்ந்த ஜியோ ஆப் ஒன்று வெளியாகுமென்று என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.