நான்கு தசாப்தங்களாக இந்திய மக்களின் சேவையில் ரிலையன்ஸ்: முகேஷ் அம்பானி நெகிழ்ச்சி!!
ரிலையன்ஸ் நிறுவனம் 40 ஆண்டுகளாக தனது வர்த்தக பயணத்தில் வெற்றி நடை போட்டு வருகிறது. இன்று உலக அளவில் அனைவராலும் திரும்பி பார்க்கப்படும் நிறுவனமாக ரிலையன்ஸ் வளர்ந்துள்ளது.
இன்று முகேஷ் அம்பானி ஜியோ 4ஜி செல்போன் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் 2ஜி பயன்பாட்டாரின் எண்ணிக்கை முழுமையாக குறையும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது,
ரிலையன்ஸ் நிறுவன வளர்ச்சி:
# இந்திய முதலீட்டாளர்களையும் இந்திய பொருளாதாரத்தையும் ரிலையன்ஸ் நிறுவனம் இன்று தனது வளர்ச்சியால் கவுரபடுத்தியுள்ளது.
# 1977 ஆம் ஆண்டு 70 கோடியாக இருந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் லாபம் தற்போது 3,30,000 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது இது 4700 சதவீதம் அதிக லாபத்தை கண்டுள்ளது.
# மேலும் நிகர லாபம் 3 கோடிகளில் இருந்து 30,000 கோடிகளாக உயர்ந்துள்ளது. இது 10,000 சதவீத வளர்ச்சி ஆகும்.
# மொத்த சொத்துக்களின் மதிப்பு 33 கோடிகளில் இருந்து 7,00,000 கோடிகளாக அதிகரித்துள்ளது. இது 20,000 சதவீத அபரீத வளர்ச்சி.
# சந்தை முதலீடு 10 கோடிகளில் இருந்து 5,00,000 கோடிகளாக உயர்ந்துள்ளது.
# 1977 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனத்தில் 1000 ரூபாயை முதலீடு செய்தவர்கலின் லாபம் தற்போது 16,54,503 ரூபாயாக உள்ளது.
# அதேபோல் 1977-ல் 3500 ஊழியர்கள் மட்டுமே கொண்டிருந்த இந்த நிறுவனம் தற்போது 2,50,000 ஊழியர்களுக்கு வேலை வழங்கியுள்ளது என தெரிவித்தார்.
ரிலையன்ஸ் ஜியோ:
இலவசங்களால் துவங்கிய ரிலையன்ஸ் ஜீயோ தற்போது அனைவருக்கும் அவசியமாய் மாறியுள்ளது. 170-க்கும் குறைவான நாட்களில் 100 மில்லியன் வாடிக்கையாளர்கள் ஜியோவை பயன்படுத்த துவங்கினர். ஒரு நொடிக்கு 7 வாடிக்கையாளர்கள் ஜியோவில் இணைய துவங்கினர்.
ஜியோ தண் தணா தண் ஆஃபர் மூலம் மாதம் ஒருமுறை ரூ.153-க்கு ரீசார்ஜ் செய்தால் வாய்ஸ் கால்கள், மெசேஜ், மற்றும் டேட்டா என அனைத்தும் அன்லிமிடெட்டாக கிடைக்கும். மேலும், 54 மற்றும் 24 ரூபாய்க்கு ரீசார்ஜ் பேக்குகளையும் அறிமுகம் செய்கிறோம்.
தற்போது ஜியோ 125 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. ஜியோ டிவி, ஜியோ ஃபைபர் போன்ற திட்டங்களையும் மக்கள் பெருமளவில் ஆதரிக்கின்றனர்.
இதை தவிர்த்து ரிலையன்ஸ் பெட்ரோ கெமிகல், எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி, சில்லறை விற்பனை, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு, ரிலையன்ஸ் பவுண்டேஷன் ஆகிய அனைத்திற்கும் ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி. இன்று எனது தந்தை திருபாய் அம்பானி எங்களுடன் என்றும் இருக்கிறார் என நம்புகிறேன் என தெரிவித்தார்.