திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: செவ்வாய், 7 நவம்பர் 2017 (12:25 IST)

இனி தினமும் 1.5ஜிபி; ஜியோவை காலி செய்த ஏர்டெல்

தினமும் 1ஜிபி டேட்டா என அறிமுகப்படுத்திய ஜியோவை தினமும் 1.5ஜிபி என ஏர்டெல் காலி செய்துவிட்டது.


 

 
இலவச 4ஜி இணையதள வசதி மற்றும் குரல் அழைப்பு சேவைகள் ஜியோ தொலைத்தொடர்பு துறையில் பெரிய மாற்றத்தை கொண்டுவந்தது. இதனால் மற்ற தொலைத்தொடர்கள் பெரிய சிக்கலை சந்தித்தனர். கடந்த 1ஆண்டு காலமாக இந்தியாவில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ஜியோவுடன் போட்டி போட்டு வருகின்றது.
 
குறிப்பாக ஏர்டெல் ஜியோவுக்கு போட்டியாக பல அதிரடி சலுகைகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ஜியோ அறிமுகப்படுத்திய தினமும் 1ஜிபி என்ற முறையை உடைத்து நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி வழங்க முடிவு செய்துள்ளது ஏர்டெல்.
 
ரூ.349க்கு ரிசார்ஜ் செய்தால் வரமற்ற அழைப்புகள் மற்றும் தினமும் 1ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த ரூ.349 கட்டண சேவையில் நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி வழங்கப்படும் என ஏர்டெல் அறிவித்துள்ளது.
 
வாடிக்கையாளர்கள் இந்த சேவையை பெற மை ஏர்டெல் இணையதள பக்கம் அல்லது செயலியை அனுகவும்.