ரூ.73,000 கோடி வருமானத்தை மறைத்து, ரூ.550 கோடி நஷ்டம் காட்டும் ஏர்டெல்!!


Sugapriya Prakash| Last Updated: திங்கள், 24 ஜூலை 2017 (19:21 IST)
பிரபல தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தால் காலாண்டிற்கு ரூ.550 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. 

 
 
பிற ஏர்டெல் மொபைல் எண்களுக்கு ஜியோ மூலம் மேற்கொள்ளப்படும் அழைப்புகளால் நிமிடத்திற்கு 21 பைசா வீதம்,  ரூ.550 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது. 
 
ஆனால், இதனை எதிர்த்து ஜியோ வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்டர்கனெக்ஷன் பயன்பாட்டு தொகையில் மட்டும் ஏர்டெல் ரூ.73,000 கோடிகளை வருமானமாக ஈட்டியுள்ளது என குறிப்பிட்டிருந்தது. எனவே, ஏர்டெல் நிறுவனம் லாபத்தை மறைத்து நஷ்டத்தை மட்டும் கணக்கு காட்டுவதாக ஜியோ குற்றம் சாட்டியுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :