புதன், 17 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: வியாழன், 6 ஏப்ரல் 2017 (04:00 IST)

360 சேனல்கள். 50 HD சேனல்கள். முதல் மூன்று மாதல் இலவசம். அடுத்த அதிரடியில் ஜியோ டி.டி.ஹெச்

360 சேனல்கள். 50 HD சேனல்கள். முதல் மூன்று மாதல் இலவசம். அடுத்த அதிரடியில் ஜியோ டி.டி.ஹெச்
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ 4G இலவச சேவை அறிமுகம் செய்யப்பட்ட ஒருசில நாட்களில் நாடு முழுவதும் காட்டுத்தீ போல பரவி இன்று சுமார் 10 கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. அடுத்தடுத்த இலவச அறிவிப்பே இந்த வரவேற்பிற்கு காரணம்





இந்த நிலையில் இலவச இணையதள சேவையை அடுத்து ஜியோ தற்போது டி.டி.ஹெஸ் சேவையிலும் கால்பதிக்க உள்ளது. இலவசம் கொடுத்தால்தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆக முடியும் என்பதை சரியாக புரிந்து கொண்ட ஜியோ, டி.டி.ஹெச் சேவையிலும் முதல் மூன்று மாதங்கள் இலவசம் என அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை

மேலும் ஜியோ செட்-டாப் பாக்ஸ்ம் டிடிஎச் சேவையில் 360க்கும் மேற்பட்ட சேனல்களை வழங்க ஜியோ திட்டமிட்டுள்ளது. அதில் 50 சேனல்கள் ஹெச்.டி. சேனல்களாகும். ஜியோ சேவைகளைப் போலவே இவற்றையும் குறைந்த விலையில் வழங்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.