ஞாயிறு, 23 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 9 நவம்பர் 2016 (16:20 IST)

500,1000 ரூபாய் நோட்டுகளால் பிளிப்கார்ட் அமேசான் சேவை ரத்து

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பிளிப்கார்ட், அமேசான் ஆகிய நிறுவனங்கள் சில வாரங்களுக்கு கேஷ் ஆன் டெலிவரி சேவையை ரத்து செய்துள்ளனர்.


 

 
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மோடியின் அறிவிப்பு சாமானியர்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் சந்தைகளில் விற்பனைகள் என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இகாமர்ஸ் நிறுவனங்களையும் விட்டு வைக்கவில்லை. 
 
பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் இதனால் கேஷ் ஆன் டெலிவரி சேவையை சில வாரங்களுக்கு ரத்து செய்துள்ளனர். இந்நிறுவனங்கள் 2000 ரூபாய் மேல் பொருட்கள் ஆர்டர் செய்பவர்களுக்கு இந்த கேஷ் ஆன் டெலிவரி சேவை கிடையாது என்று தெரிவித்துள்ளது.