1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 7 நவம்பர் 2016 (10:11 IST)

காந்தியின் படம் அச்சிடாத 2000 ரூபாய் நோட்டு: ஜனவரி மாதம் வெளியீடு

மாஹாத்மா காந்தியின் படம் அச்சிடாத 2000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 
 
ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளால் இந்தியாவில் கருப்புப்பணம் மற்றும் கள்ள நோட்டு புழக்கம் அதிகமாகிவிட்டது. இதனால் அவற்றை திரும்பப்பெற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் மத்திய அரசுக்கும், இந்திய ரிசர்வ் வங்கிக்கும் வலியுறுத்தி வருகின்றன. 
 
இந்நிலையில் மத்திய அரசு 2000 ரூபாய் நோட்டுகளை அடுத்த வருடம் ஜனவரி மாதம் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி மைசூர் கரன்சி அச்சகத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு தயாராக இருப்பதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. 


 

 
மேலும் தற்போது அச்சடிக்கப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படம் இல்லை என்றும் கூறப்படுகிறது.