1. செய்திகள்
  2. நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2022
  3. தேர்தல் அலசல்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (14:37 IST)

தாமரை மலர்ந்தே தீரும் - அண்ணாமலை திட்டவட்டம்!

சென்னை மாநகராட்சி, அனைத்து நகராட்சி, பேரூராட்சிகளிலும் தாமரை மலர்ந்தே தீரும் என தமிழக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி. 

 
தமிழகத்தில் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதை அடுத்து தேர்தல் ஆணையம் இறுதிகட்ட ஏற்பாடுகளை தயார் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
வாக்குச்சாவடிகளுக்கு வாக்குச்சீட்டுகள் அனுப்பும் பணிகள், தேர்தல் அதிகாரிகளை அனுப்பி வைக்கும் பணிகள் உள்பட அனைத்து பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்கள் கொரோனா வைரஸ் விதிமுறைகளை கடைபிடிக்க முறைகளும் விளக்கம் சொல்லப்படும் என்றும் கூறப்படுகிறது. 
 
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்பதும் இதற்கான இறுதிகட்ட பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக உள்ளது. 
 
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதாவது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர்கள் மீது எந்தவிதமான புகாரும் கிடையாது. அவர்கள் மக்களை கவர்ந்துள்ளார்கள். சென்னை மாநகராட்சி, அனைத்து நகராட்சி, பேரூராட்சிகளிலும் தாமரை மலர்ந்தே தீரும்.
 
ஆளுங்கட்சியினரின் ஆராஜகங்கள் அனைத்து பகுதியிலும் நடக்கிறது. தேர்தல் ஆணையம் பாரா முகமாகவே இருக்கிறது. எதிர்பார்த்த அளவு அவர்கள் வேலை செய்ய வில்லை. தேர்தலை முறையாக நடத்துவார்கள் என்று தேர்தல் ஆணையத்தின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.