நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளரும், மத்திய முன்னாள் அமைச்சருமான ஆ.ராசா தோல்வியடைந்துள்ளார்.
நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணன் 4,63,700 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் ஆ.ராசா 3,58,760 வாக்குகள் பெற்றார். எனவே அந்த தொகுதியில் 1,04,940 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றது.
இந்த தொகுதியில் 49,553 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.