வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. வேலை வழிகாட்டி
  3. க‌ல்‌வி
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 12 ஜனவரி 2016 (13:49 IST)

வி.ஏ.ஓ தேர்வு - மாதிரி வினாவிடை (பகுதி - 1)

மாதிரி வினாக்கள்: பொதுத்தமிழ்


 


1. பிரித்தெழுதுக: வரவுண்மை
A) வர + வுண்மை
B) வருவது + உண்மை
C) வரு + உண்மை
D) வரவு + உண்மை
 
2. பிரித்தெழுதுக: நல்வினை
A) நல் + வினை
B) நல்ல + வினை
C) நன்மை + வினை
D) நன்று + வினை
 
3. பிரித்தெழுதுக: வேங்கடமாமலை
A) வேங்கட + மாமலை
B) வேம் + மா + மலை
C) வேங்கடம் + மாமலை
D) வேங்கடம் + மா + மலை
 
4) பிரித்தெழுதுக: பொதுவறு
A) பொதுமை + அறு
B) பொது + அறு
C) பொது + வறு
D) பொ + துவறு
 
5) பிரித்தெழுதுக: கடுநடை
A) கடுமை + நடை
B) கடு + நடை
C) கட்ட + நடை
D) காடு + நடை
 
6) பிரித்தெழுதுக: பொற்புயம்
A) பொற் + புயம்
B) பொற்பு + உயம்
C) பொன் + புயம்
D) பொன்மை + புயம்
 
7) பிரித்தெழுதுக: ஈரெட்டாண்டு
A) ஈரெட்டு + ஆண்டு
B) இரண்டு + எட்டாண்டு
C) இரண்டு + எட்டு + ஆண்டு
D) ஈர் + எட்டு + ஆண்டு
 
8) பிரித்தெழுதுக: பாடூன்றும்
A) பாடு + ஊன்றும்
B) பாடூ + உன்றும்
C) பாட்டு + இன்றும்
D) பாட் + ஊன்றும்
 
9) பிரித்தெழுதுக: எந்தை
A) எம் + தந்தை
B) எந் + தாய்
C) எந் + தந்தை
D) எந்து + ஆய்
 
10) பிரித்தெழுதுக: பெருநகர்
A) பெரிய +நகர்
B) பெருமை + நகர்
C) பெரு + நகர்
D) பெரி + நகர்
 
11) பிரித்தெழுதுக: பொறியியல்
A) பொது + அறிவியல்
B) பொறி + இயல்
C) பொறி + யியல்
D) பொது + இயல்
 
12) பிரித்தெழுதுக: செயற்கரிய
A) செயல் + அரிய
B) செய்ய + அறிய
C) செயல் + கரிய
D) செயற்கு + அரிய
 
13) பிரித்தெழுதுக: மூவேந்தர்
A) மூன்று + வேந்தர்
B) மூன்று + ஏந்தர்
C) மூ + வேந்தர்
D) மூத்த + வேந்தர்
 
14) பிரித்தெழுதுக: மண்ணரசு
A) மண்ணும் + அரசு
B) மண் + அரசு
C) மண்ணின் + அரசு
D) மண் + ணரசு
 
15) பிரித்தெழுதுக: முறிவுற
முறிவு +அற 
முறிவு + உற
முறி + வுற
முறி + உற
 
16) பிரித்தெழுதுக: அச்சிறும்
A) அ + சிறும்
B) அச்சு + இறும்
C) அச் + சிறும்
D) அச்சி + இறும்
 
17) பிரித்தெழுதுக: நெட்டிலை
நெடு + இலை
நெட்டி + இலை
நெடுமை + இலை
நெட் + டிலை
 
18) பிரித்தெழுதுக: சேதாம்பல்
A) சேதா + ஆம்பல்
B) செம்மை + ஆம்பல்
C) சே + ஆம்பல் 
D) சே + தாம்பல்
 
19) பிரித்தெழுதுக: தாழம்பூ
A) தாழ் + அம் + பூ
B) தாழை + அம் + பூ
C) தாழை + பூ
D) தாழம் + பூ
 
20) பிரித்தெழுதுக: குற்றியலுகரம்
A) குற்றிய + உகரம்
B) குறுமை + உகரம்
C) குறு + இயல் + உகரம்
D) குறுமை + இயல் + உகரம்
 
விடை:
1) D 2) C 3) D 4) A 5) A 6) C 7) C 8) A 9) A 10) B
11) B 12) D 13) A 14) B 15) A 16) B 17) B 18) B
19) C 20) A