ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வேலை வழிகாட்டி
  3. க‌ல்‌வி
Written By Ashok
Last Modified: வெள்ளி, 8 ஜனவரி 2016 (17:00 IST)

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 4ஆண்டு பிஏபிஎட் படிப்பு அறிமுகம்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கு டெல்லி பல்கலைக்கழக மானிய குழு சார்பாக வழங்கப்படும் 12B அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக பல்கலை துணைவேந்தர் சந்திரகாந்தா குறிப்பிட்டுள்ளார்.


 
 
சென்னை சைதைப்பேட்டையில் உள்ள பல்கலை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கு பல்கலைக்கழக மானிய குழு சார்பாக வழங்கப்படும் 12B அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது என்றும் இந்த ஆண்டு முதல் 4 ஆண்டு ஒருங்கிணைந்த பிஎஸ்சி பிஎட் மற்றும் பிஏ பிஎட் படிப்புகள் இந்த பல்கலைக்கழகத்தின் தொலைத்தூர படிப்பில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறினார்.