புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. வியாதிகள்
Written By Sasikala

நோய்களை பரப்பும் கொசுவை கட்டுப்படுத்தும் சில இயற்கை வழிகள்!!

தேங்காய் நார்களை எரித்தால், அதில் இருந்து வரும் புகை கொசுக்களை விரட்டும். மாலை நேரத்தில் தேங்காய் நார்களை எரித்து வீடு முழுக்க அதன் புகையைக் காண்பித்தால், ஒரு கொசுகூட இருக்காது. இயற்கை நார்களின் புகையால், உடலுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.
வீட்டின் ஒரு பக்கத்தில் நெருப்பு வைத்து அதில் மாம்பூக்களைப் போட்டால், அதில் இருந்து வரும் புகை கொசுக்களை விரட்டிவிடும்.
 
வேப்பிலை, நொச்சி இலை ஆகியவற்றை உலர்த்தி, நெருப்பில் போட்டுப் புகைக்கவைத்தால், கொசுத் தொல்லை இருக்காது.
 
நாய்த்துளசிப் பூவை உலர்த்தி தூள் செய்து சாம்பிராணியுடன் சேர்த்துப் புகைக்கவைத்தால், கொசுத் தொல்லை தீரும்.
 
பூண்டு வாசனை கொசுவுக்கு ஆகாது. நிறையப் பூண்டு சாப்பிட்டால் அல்லது தேய்த்து கொண்டால், அதன் மணத்திலேயே கொசு ஓடிவிடும்.
 
கொசுவை கட்டுப்படுத்த விளக்கு எரிக்கும் எண்ணெய்யை கொண்டு கொடுவை ஒழிக்கலாம். அந்த வகையில் விளக்கு எரிக்க வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பெண்ணெய், நல்லெண்ணெய், நெய் போன்றவற்றை பயன்படுத்தலாம். கொசுவை ஒழிக்க ஜன்னல்களில்  கொசுவலையை மாட்டிவிடலாம்.
 
பிறந்த குழந்தைகள் மேட் புகையைச் சுவாசிக்கும் சூழலுக்கு ஆளானால், வலிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிலருக்கு மலட்டுத்தன்மை ஏற்படும். நுரையீரல் புற்றுநோய் உருவாவதற்கான வாய்ப்புகள்கூட இருக்கின்றன ஆய்வுகள் கூறுகிறது. ஒரு கொசுவத்தி எரியும்போது, அது வெளியிடும்  சாம்பலின் அளவு 75 முதல் 137 சிகரெட் எரிப்பதனால் வரும் சாம்பலுக்குச் சமம் என்பதால் அவை உடலுக்கு கேடு விளைவிப்பதாக உள்ளது.