1. இதர வாசிப்பு
  2. »
  3. ‌சிற‌ப்புக‌ள்
  4. »
  5. ‌தீபாவ‌ளி
  6. ‌தீபாவ‌ளி: ரவா லட்டு

Rava Laddu | ‌தீபாவ‌ளி: ரவா லட்டு

ரவா லட்டு
தேவையான பொருட்கள்:

வறுத்த ரவை - 100 கிராம்
பொடி செய்த சக்கரை - 200 கிராம்
(மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்)
நெய் - 50 கிராம்
பால் - 50 மில்லி
முந்திரி, திராட்சை - தேவையான அளவு

செய்முறை:

வறுத்த ரவையுடன், நெய்யில் பொரித்த முந்திரி, திராட்சையை போடவும். பொடி செய்த ச‌ர்க்கரையை வறுத்த ரவையுடன் சேர்க்கவும்.

இந்த கலவையில் சூடான பாலை விடவும். பொறுக்கும் சூட்டில் அதை உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். சுவையான ரவா லட்டு தயார்.
About Writer
Webdunia