உங்கள் ராசிக்கு இன்றைய தினம் எப்படி அமையும்?


லெனின் அகத்தியநாடன்| Last Modified சனி, 8 அக்டோபர் 2016 (06:00 IST)
உங்கள் ராசிக்கு இன்றைய தினம் எப்படி அமைய இருக்கிறது என்பது குறித்து ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரண் கணித்துக் கூறுகிறார்...
 
 
மேஷம் :
 
கணவன்&மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.          
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
 
ரிஷபம்:
 
சந்திராஷ்டமம் தொடர்வதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகும். நண்பர்கள்,  உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள்.   
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
 
மிதுனம்:
 
சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள்  கிடைக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.  
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
 
கடகம்:
 
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.  
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
 
சிம்மம்:
 
புதிய யோசனைகள் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். அக்கம்&பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.   
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
 
கன்னி:
 
பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.   
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
 
துலாம்:
 
தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வீட்டை விரிவுப்படுத்துவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும்.  
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை
 
விருச்சிகம்:
 
குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். நவீன மின்னணு,  மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.   
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
 
தனுசு:
 
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும்.    
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
 
மகரம்:
 
குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். பழைய கடன் பிரச்சனை அவ்வப் போது மனசை வாட்டும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் அதிரடி முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள்.  
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
 
கும்பம்:
 
எதையும் தாங்கும் மனவலிமைக் கிடைக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.      
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
 
மீனம்:
 
தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர்,  நண்பர்களால் ஆதாயம் உண்டு. நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். 
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்


இதில் மேலும் படிக்கவும் :