உங்கள் ராசிக்கு இன்றைய தினம் எப்படி அமையும்?

லெனின் அகத்தியநாடன்| Last Modified வியாழன், 28 ஏப்ரல் 2016 (06:00 IST)
மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.
வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்

ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் திடீர்திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். சில நேரங்களில் நன்றி மறந்த சொந்த-பந்தங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

மிதுனம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த மின்னணு, மின்சாரப் பொருட்கள் வாங்குவீர்கள். தாய்வழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் மதிப்பார்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்

கடகம்: சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களால் நன்மை உண்டு. சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்

சிம்மம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நட்பு வட்டம் விரியும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு

கன்னி: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியம் இன்று முடியும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை

துலாம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா

விருச்சிகம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். தோற்றப் பொலிவுக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் மகிழ்ச்சி தங்கும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர் நீலம்

தனுசு: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்னைகள் அதிகமாகும். நீங்கள் எதைப் பேசினால் அதை எல்லோரும் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: மிண்ட் கிரே, வைலெட்

மகரம்: கணவன்-மனைவிக்குள் வீண் விவாதம் வந்துச் செல்லும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் பிரச்னைகள் வந்துப் போகும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்

கும்பம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே

மீனம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் செல்வாக்கு உயரும்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை


இதில் மேலும் படிக்கவும் :