1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. பஞ்சாங்கம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 4 ஏப்ரல் 2016 (06:00 IST)

உங்கள் ராசிக்கு இன்றைய தினம் எப்படி அமையும்?

உங்கள் ராசிக்கு இன்றைய தினம் எப்படி அமைய இருக்கிறது என்பது குறித்து ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரண் கணித்துக் கூறுகிறார்...

மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே

ரிஷபம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும்.    
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

மிதுனம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வாகனத்தை சரி செய்வீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.    
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு

கடகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவார்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்

சிம்மம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். 
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை

கன்னி: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை

துலாம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். 
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்

விருச்சிகம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். திடீர் பயணம் உண்டு. புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.  
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை

தனுசு: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், பிங்க்

மகரம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.  
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, ரோஸ்

கும்பம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் மறதி, எதிர்காலம் குறித்த கவலைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து விலகும். மற்றவர்களை நம்பி குறுக்கு வழியில் செல்ல வேண்டாம். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். உத்யோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டாம். 
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம் வெள்ளை

மீனம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் வீண் விவாதம் வந்துப் போகும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாகப் பேசப்பாருங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியால் சங்கடங்கள் வரும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, கிரே