தேமுதிக உண்ணாவிரதத்தில் விஜயகாந்த் பங்கேற்கவில்லை : பின்னணி என்ன?

தேமுதிக உண்ணாவிரதத்தில் விஜயகாந்த் பங்கேற்கவில்லை : பின்னணி என்ன?


Murugan| Last Modified வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (10:23 IST)
கர்நாடக அரசை  கண்டித்து, தேமுதிக சார்பில் நடத்தப்படும் உண்ணாவிரதப் போராட்டத்தில், தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை.

 

 
கர்நாடக அரசைக் கண்டித்து இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்கள், லாரி உரிமையாளர் சங்கங்கள் ஆகியவை முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு ஆதரவு தெரிவிப்பதுடன், சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகம் முன் மாபெரும் கண்டன உண்ணாவிரதப் போராட்டம் தேமுதிக சார்பில் நடைபெறும் என்று விஜயகாந்த் கூறியிருந்தார்.
 
அதேபோல், இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பல தேமுதிக நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
 
ஆனால், உடல் நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக விஜயகாந்த் பிரேமலதா பங்கேற்றுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :