செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By Sinoj
Last Modified: வியாழன், 13 ஜூலை 2023 (21:13 IST)

தான் படித்த பள்ளிக்கு ரூ.20 லட்சம் நிதியளித்த சாலமன் பாப்பையா

salomon papaiah
மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் உள்ள வெள்ளிவீதியார் மாநகராட்சிப் பள்ளியில் பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா கடந்த 1941 முதல் 1945 ஆம் ஆண்டுவரை( 1 ஆம் வகுப்பு முதல் 4 ஆம் வகுப்பு வரை) படித்தார்.

தற்போது அப்பள்ளி பெண்கள் மேல்நிலைப் பள்ளியாக உள்ளது. இதில், 2000 க்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  தமிழ் நாடு அரசு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பள்ளியில் படித்த முன்னாள்  மாணவர்கள் உதலாம் என்று கூறியது.

அதன்படி, பலரும் தாங்கள் படித்த பள்ளிக்கு உதவி வருகின்றனர். அந்த வகையில் பட்டிமன்றத்தில் தனக்கென தனி பாணியை வகுத்து  மக்கள் மனதில் இடம்பிடித்த பேராசிரியர் சாலமன் பாப்பையா, இப்பள்ளியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு தனது பங்காக ரூ. 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை  மாநகராட்சி ஆணையர் பிரவீன்குமாரிடம் வழங்கினார்.