வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By Sasikala
Last Updated : வியாழன், 8 டிசம்பர் 2016 (13:42 IST)

ஜெ. ஜெயலலிதாவாகிய நான்.........

கோமள வள்ளியாக, அம்முவாக, புரட்சி தலைவியாக, முதலமைச்சராக அறியப்பட்ட நான் அமரர் ஆனேன். எனது இறுதி பயணத்தில் கட்சி சார்பற்று அனைவரும் என் மேல் காட்டிய அன்பிற்கு இப்போதும் கடமை பட்டு இருகின்றேன்.



ஒரு பெண்ணாக எனது பொது வாழ்வு அவ்வளவு எளிதானாக இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். அனுபவம் எனும் ஆசான் எனக்கு சில இடங்களில் கசப்பு மருந்துகளையும் சில இடங்களில் இனிப்பு மருந்துகளையும் தந்தது. மெரினாவில் உறங்கும் நான் என் வாழ்கை பயணத்தை சற்றே திருப்பி பார்கிறேன்.

என் தாயார் சந்தியா என் மேல் வைத்த அன்பு, என் மீது அவர் வைத்த நம்பிக்கை, என்னை அவர் தயார் படுத்திய பாங்கு, அவரின் பங்கு என் வளர்ச்சியில் அளப்பரியானது. நீங்களும் உங்களின் குழந்தைகளில் பால் பேதம் பாராமல் அவர்களின் வளர்ச்சியில் பங்கு எடுங்கள! பெண் தானே என்று பேசுவதை நிறுத்துங்கள்! ஒவ்வாரு பெண் குழந்தையும் அம்முதான். அவர்களின் தாயார் சந்தியாவா என்பதை பொறுத்தே ஜெயலலிதாகள் உருவாகிறார்கள். 

என் அரசியல் ஆசான் MGRஐ போல நானும் அவமானாங்களால், தோல்விகளால், துரோகங்களால் அரசியல் கண்டேன். அவமானாங்களும் தோல்விகளும் எங்களை மிகப்பெரும் தலைவர்களாக உருவெடுக்க வைத்தன. உங்களின் வாழ்க்கையில் ஏற்படும் அவமானாங்களையும், தோல்விகளையும், தைரியமாக எதிர் கொள்ளுங்கள்! 

பச்சைப்பட்டு உடுத்தி உறங்கும் என்னை இரும்பு பெண்மணி, இரும்பு இதயம், இரும்பு பட்டாம் பூச்சி, என்றெல்லாம் சொல்லுகிறார்கள். உண்மையில் நான் மிருதுவான இதயம் படைத்தவள். என் அரசியல் நடவடிக்கைகளால் அவ்வாறு அறியப்படுவதாக அறிகிறேன். பெண்ணும் பெண்மையின் கருணையின் வடிவங்கள் தானே. அதற்கு நானும் அதற்கு விதி விளக்கல்ல! 

சாஸ்திர, சம்பிருதாயங்களுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தேன். வாழ்க்கையை இப்படி தான் வாழ வேண்டும் என்று கட்டுண்டு வாழ்தேன் நீங்களும்  கட்டுண்டு வாழுங்கள்! அதில் உங்கள் லட்சியம் காணுங்கள்.

கடவுளிடம் எனக்கான சுற்றுக் கேள்வி வரும்போது, என் ஒரு கையெழுத்தில் லட்சோப லட்ச மக்களுக்கு குறைந்த  விலையில் சுய உதவி குழுக்கள் மூலம் தினமும் பல லட்சம் பேருக்கு உணவு வழங்கினேன் என்பதை தவிர வேறு ஓன்றும் இல்லை. கடவுள் அதை ஏற்பார் என நம்புகிறேன். முடிந்தவரை உங்களின் பக்கத்தில் இருக்கும் பசித்தவனுக்கு உணவளியுங்கள்! அவன் பசியாறிய பின் அவன் முகத்தில் தெரியும் ஆனந்தத்தில் என்னை பாருங்கள் !

தங்கப்பேழையில் வைத்து என்னை அடக்கம் செய்தீர்கள். என் கைகளில் தற்போது எதுவும் இல்லை. அது தான் மனித வாழ்கை. வாழ்கை ஒரு வட்டம். ஆரம்பித்த இடத்திற்கே இறுதியில் வந்து விட்டேன். உங்களின் அன்பை மட்டும் என் இதயத்தில் எடுத்து செல்கிறேன்.
எதை கொண்டு வைத்தேன்? அதை கொண்டு செல்ல? சந்தியாவின் மகளாக வந்தேன் உங்களின் மகளாக, சகோதிரியாக, தலைவியாக விடை பெறுகிறேன்.  

 
நன்றி வணக்கம்
என்றும் அன்புடன் உங்களின் அன்பு சகோதரி
ஜெ. ஜெயலலிதா

இரா .காஜா பந்தா நவாஸ் ,
பேராசிரியர் 
[email protected]