வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 11 செப்டம்பர் 2016 (18:55 IST)

தேநீர் பிரியர்களா நீங்கள்? - அப்படியென்றால் இதைப் படியுங்கள் முதலில்

சமீபத்தில் தேயிலை மொத்த வர்த்தக நிறுவனம் ஒன்றிலிருந்து 25 டன் அளவிலான தரம் குறைந்த டீத்தூள் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று உணவு பாதுகாப்பு கழக அதிகாரி தெரிவித்தது ஊடகங்களில் வெளிவந்தது.
 

 
உணவு பாதுகாப்பு கழகத்தினரின் திடீர் சோதனையில் பிடிபட்ட இந்த தரம் குறைவான டீத்தூள் பாக்கெட்டுகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
ஆய்வு முடிவுகள் வெளி வந்ததும் காலாவாதியான டீத்தூள் பாக்கெட்டுகளை விற்பனை செய்வதற்கு டீக்கடைகள் மற்றும் தேயிலை மொத்த வர்த்தக நிலையங்களுக்கு தடை விதிக்கப்படலாம்.
 
அது மட்டுமல்லாமல் தேயிலை விற்பனை உரிமங்களை ரத்து செய்வதற்கான நடவடிக்கையில் தேயிலை வாரியம் ஈடுபடலாம் என்ற செய்தியும் வெளி வந்துள்ளது.
 
வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில் தரம் குறைவான டீத்தூளில் நிறத்துக்காக பெரும்பாலும் பிஸ்மார்க் பிரவுன், பொட்டாசியம் ப்ளு, செயற்கை மஞ்சள் தூள், இண்டிகோ போன்றவைகள் உணவு பாதுகாப்பு கழகத்தால் அங்கீகரிக்கப்படாத வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.
 
இந்த வேதிப்பொருட்கள் கல்லீரல் மற்றும் செரிமான மண்டலத்தில் அதிகபாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை. தொடர்ந்து இந்த தரம் குறைந்த டீத்தூளில் தயாரான டீ அருந்துபவர்களுக்கு பல விதமான உடல் நல கோளாறுகள் வரலாம்.
 
எனவே தேநீர் பிரியர்கள் தாங்கள் அருந்தும் தேநீர் தரமானதுதானா என்பதில் கவணமாக இருப்பது நல்லது.