வெஸ்ட் இண்டீஸ் தொடர்; இந்திய அணி முதலில் பேட்டிங்


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 23 ஜூன் 2017 (19:35 IST)
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் தொடரின் முதல் ஒருநாள் போட்டி இன்று நடைப்பெறுகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

 

 
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டியில் தோல்வி, பயிற்சியாளர் கும்ப்ளே பதவி விலகியது என பல நெருங்கடியில் இந்திய அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இன்று முதல் ஒருநாள் நடைப்பெறுகிறது.
 
இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவருக்கு பதிலாக ராகானே களமிறங்கியுள்ளார்.
 
12 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் இந்திய அணி விக்கெட் எதுவும் இழக்காமல் 59 ரன்கள் குவித்துள்ளது. தவான் 35 பந்துகளில் 25 ரன்கள் குவித்துள்ளார். ராகானே 40 பந்துகளில் 323 ரன்கள் குவித்துள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :