வியாழன், 22 ஜனவரி 2026
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 6 ஆகஸ்ட் 2025 (08:39 IST)

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!
ஆசியாவில் கிரிக்கெட் விளையாடும் நாடுகளைக் கொண்டு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை ஆசியக் கோப்பை தொடரை நடத்தி வருகிறது, ஆசியக் கிரிக்கெட் கவுன்சில், இதன் அடுத்த சீசன் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி தொடங்கி பத்தொன்பதாம் தேதி வரை நடக்கவுள்ளது.

இந்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் டி 20 வடிவில் நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் அடுத்த ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடர் வருகிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ள இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 14 ஆம் தேதி நடக்கவுள்ளது.

இந்த தொடருக்கான அணியில் இந்திய டி 20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இடம்பெற மாட்டார் தகவல் வெளியானது. ஏனென்றால் அவர் சமீபத்தில் ‘விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் குடலிறக்கத்துக்கான அறுவை சிகிச்சை’ செய்து கொண்டிருந்தார். ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி அவர் பூரண குணமடைந்து விட்டதாகவும், அதனால் அவரே இந்த தொடரில் கேப்டனாக செயல்படுவார் என்றும் சொல்லப்படுகிறது.