செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 11 ஆகஸ்ட் 2021 (12:20 IST)

அணி பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ரவி சாஸ்திரி விலகல்? – ட்ராவிட்டுக்கு வாய்ப்பு!

உலக கோப்பை டி20க்கு பிறகு இந்திய அணி பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ரவி சாஸ்திரி விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் 19 வயதிற்கு மேற்பட்ட அணியின் பயிற்சியாளராக இருந்து வருபவர் ரவி சாஸ்திரி. வயது மூப்பு காரணமாக இவர் விரைவில் இந்திய அணி பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலக உள்ளதாக தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்னும் சில தினங்களில் ரவி சாஸ்திரி தனது ஓய்வை அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன, அடுத்த அணி பயிற்சியாளராக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், 19 வயதிற்குட்பட்ட இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளருமான ராகுல் ட்ராவிட் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.