1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 22 அக்டோபர் 2024 (14:48 IST)

மொதல்ல போய் எடையைக் கொறைச்சிட்டு வாங்க… பிருத்வி ஷாவைக் கழட்டிவிட்ட மும்பை !

திறமை இருந்தும் போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டும் பிருத்வி ஷா இந்திய அணியில் தன்னுடைய இடத்தைத் தக்கவைக்க முடியாமல் தடுமாறுகிறார். சில ஆண்டுகளாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் பிருத்வி ஷா இந்திய அணியில் எடுக்கும் போது சொதப்புகிறார்.

அதே போல ஐபிஎல் போட்டிகளிலும் பிரித்வி ஷா சீரான ஆட்டத்திறனை வெளிப்படுத்த தவறிவருகிறார். அது மட்டுமில்லாமல் உடல் எடைப் பெருகி அவர் சுணக்கமாகக் காணப்படுகிறார் என்ற விமர்சனமும் உள்ளது.

இந்நிலையில் நடந்து வரும் ரஞ்சிக் கோப்பைக்கான தொடரில் இருந்து அவரை நீக்கியுள்ளது மும்பை அணி. அதற்கு அவரின் அதிக உடல் எடையும், வலைப்பயிற்சிகளில் ஆர்வம் காட்டாமல் அவர் அலட்சியமாக இருப்பதும்தான் காரணம் என மும்பை அணி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து பிருத்வி ஷா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் “ஓய்வு தேவை. நன்றி” என நக்கலாக பதிவிட்டுள்ளார்.