சர்ச்சை கருத்து தெரிவித்த ஹர்திக் பாண்டியாவுக்கு இனிமேல் இந்திய அணியில் இடமில்லை!

சர்ச்சை கருத்து தெரிவித்த ஹர்திக் பாண்டியாவுக்கு இனிமேல் இந்திய அணியில் இடமில்லை!


Caston| Last Updated: வியாழன், 22 ஜூன் 2017 (17:28 IST)
இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் கோப்பை இறுதியாட்டத்தில் இந்திய அணி அபார தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் தனி ஒருவனாக இளம் வீரர் ஹர்திக் பாண்டியா அதிரடியாக போராடினார்.

 
 
ஆனால் மற்றொரு வீரர் ஜடேஜா சிறு தவறால் ஹர்திக் பாண்டியா அவுட்டாகி வெளியேறினார். இதன் பின்னர் ஜடேஜா கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில் அவுட்டாகி வெளியேறிய ஹர்திக் பாண்டியாவும் போட்டியின் முடிவை தனது டுவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குறிய வகையில் நம் கூட இருந்தவர்களே நம் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டார்கள் என டுவீட் செய்து பின்னர் அந்த டுவீட்டை நீக்கிவிட்டார்.


 
 
ஆனால் இந்த விவகாரம் இன்னமும் விவாதிக்கப்பட்டுதான் வருகிறது. இது தொடர்பாக டுவீட் செய்திருந்த பாலிவுட் நடிகர் கமால் ரசீத் கான் இந்திய கிரிக்கெட் அணியில் ஹர்திக் பாண்டியாவிற்கு இனிமேல் இடம் கிடைப்பது கடினம் என கூறியுள்ளார்.
 
சர்ச்சை கருத்துகளுக்கு பெயர் போனவரான கமால் ரசீத் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஹர்திக் பாண்டியா நீங்கள் ஒரு சிங்கம் ஆனால் இது போன்று நீங்கள் தைரியமாக பேசினால் அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய அணியில் உங்களுக்கு இடம் கொடுக்காமல் இந்திய கிரிக்கெட் வாரியம் உங்களை ஓரங்கட்டிவிடும் என கிண்டலாக கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :