ஸ்ரீசாந்த் மீது பிசிசிஐ விதித்த தடை நீக்கம் - கேரள உயர்நீதிமன்றம் அதிரடி


Murugan| Last Updated: திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (14:36 IST)
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீது விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை நீக்கத்தை கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

 

 
2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎஸ் கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில், ஸ்ரீசாந்த் மீது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வாழ்நாள் தடையை கொண்டு வந்தது.  அதனால், கடந்த 4 வருடங்களாக அவர் கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகியே இருந்தார்.  அதன் பின் ஒரு சினிமாவிலும் நடித்தார்.
 
இந்நிலையில், தனக்கு விதித்த வாழ்நாள் தடையை நீக்கி உத்தரவிட வேண்டும் என என அவர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் அவருக்கு விதித்த தடையை நீக்கம் செய்து உத்தரவிட்டது.
 
இந்த தீர்ப்பை தொடர்ந்து, அவர் இந்திய அணியில் மீண்டும் விளையாட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.


இதில் மேலும் படிக்கவும் :