பரிதாபமாக விக்கெட்டை இழந்த தரங்கா; தொடர்ந்து இந்தியா முன்னிலை


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 28 ஜூலை 2017 (10:51 IST)
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் தனது இன்னிங்ஸில் தடுமாறி வருகிறது.

 

 
இலங்கை சென்றுள்ள இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 2வது நாளான நேற்று 600 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் குவித்துள்ளது. 
 
வேகப்பந்து வீச்சாளர் சமி வீசிய பந்துகளில் இலங்கை அணி வரிசையாக விக்கெட்டை பறிகொடுத்தது. தரங்கா அஸ்வின் வீசிய பந்தை அடிக்க முயன்று பரிதாபமாக தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.   
 
அஸ்வின் வீசிய பந்தை தரங்கா அடிக்க முயன்றபோது, பந்து அவரது காலில் பட்டு அபினவ் கைக்கு சென்றது. உடனே அபினவ் பந்தை கீப்பர் சாகாவிடம் கொடுக்க அவர் ஸ்டம்பிங் செய்தார். மூன்றாவது நடுவர் பார்வையில் சாகா ஸ்டம்பிங் செய்யும்போது தரங்கா பேட் அந்தரத்தில் இருக்க பரிதாபமாக விக்கெட்டை இழந்தார்.


இதில் மேலும் படிக்கவும் :