வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 3 ஜூலை 2017 (11:19 IST)

இந்திய அணி வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டனர்: மத்திய அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு!

இந்திய அணி வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டனர்: மத்திய அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு!

மினி உலகக்கோப்பை எனப்படும் சாம்பியன் டிராஃபி கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டத்தில் கடந்த ஜூன் 18-ஆம் தேதி பரம எதிரிகளான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் இந்தியா பரிதாபமாக மோசமான தோல்வியை சந்தித்தது.


 
 
இதனையடுத்து இந்திய அணி வீரர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. மிக முக்கியமான போட்டிகளில் மோசமாகத் தோற்கும்போது வழக்கமாக சூதாட்ட புகார் வரும். அதே போல இந்த முறையும் இந்திய அணி வீரர்கள் மீது சூதாட்ட புகார் எழுந்துள்ளது.
 
தற்போது இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் சென்று விளையாடி வருகிறது. இந்நிலையில் தற்போது திடீரென இந்தியா, பாகிஸ்தான் இடையே நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியைப் பற்றி மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேசியுள்ளார்.
 
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், லீக் போட்டிகள் அனைத்திலும் மிகச்சிறப்பாக விளையாடிய இந்திய அணி இறுதிப் போட்டியில் 180 ரன்கள் வித்தியாசத்தில் மிக மோசமாக பாகிஸ்தானிடம் தோலியடைந்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இறுதிப் போட்டியில் சரியாக விளையாடாத இந்திய வீரர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும். அவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டது போல தெரிகிறது என்றார் அவர்.