உலகக் கோப்பையில் பூம்ரா விளையாடுவது சந்தேகம்?- இந்திய அணிக்கு பின்னடைவு!
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த ஆசியக்கோப்பைக்கு முன்பாக இந்திய அணியின் பந்துவீச்சாளர் பூம்ரா முதுகுப் பகுதியில் காயமடைந்தார். அதனால் அவர் அணியில் இருந்து விலகினார். ஆனால் காயம் முழுவதுமாக குணமடைவதற்குள் அவர் மீண்டும் அணியில் அழைக்கப்பட்டார். அதனால் மீண்டும் காயமாகி அவர் இப்ப்போது உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தார். இதையடுத்து சில மாதங்களுக்கு முன்னர் பும்ரா தேசிய கிரிக்கெட் அகாடெமியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “நல்ல நேரங்கள் வர இருக்கின்றன” எனக் கூறியுள்ளார். இதனால் அவரை மீண்டும் அணியில் நாம் எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கை எழுந்தது. ஆனால் இதுவரை பும்ரா முழு உடல் தகுதியைப் பெறவில்லை என்று சொல்லப்படுகிறது.
இப்படி குழப்பமான நிலையிலேயே பூம்ராவின் உடல்தகுதி இருந்து வந்த நிலையில் நியுசிலாந்தில் அவருக்கு மேலும் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவர் நீண்ட ஓய்வில் இருக்க வேண்டும் என்பதால் ஐபிஎல், ஆசிய கோப்பை மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் ஆகியவற்றில் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.