Daily Horoscope
✕

இந்திய அணியின் பந்துவீச்சு பலவீனமாக உள்ளது.. பாகிஸ்தான் முன்னாள் பவுலர் அதிரடி கருத்து!

Written By vinoth
Updated: செவ்வாய், 4 ஜூலை 2023 (08:22 IST)
எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 15 ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டிதான் இந்த உலகக் கோப்பை தொடரின் ஹைலைட் போட்டியாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இரு அணி முன்னாள் வீரர்களும் தங்கள் அணிகளுக்கு அறிவுரைகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் பேசியுள்ள முன்னாள் பாகிஸ்தான் பவுலர் சயித் அஜ்மல் இந்திய அணியின் பந்துவீச்சு பலவீனமாக உள்ளது என கூறியுள்ளார்.

அவர் இதுபற்றி பேசுகையில் “இந்திய அணியின் பந்துவீச்சு எப்போதுமே பலவீனமாக இருக்கும்.  இப்போது ஷமி மற்றும் சிராஜ் சிறப்பாக பந்துவீசுகின்றனர். ஜடேஜா அபாரமாக பந்துவீசுகிறார். பூம்ரா பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாடி இருந்தாலும், அவர் கடைசியாக செப்டம்பர் மாதத்தில்தான் விளையாடினார். அதனால் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு இந்திய பந்துவீச்சு அச்சுறுத்தலாக இருக்காது. பாகிஸ்தான் அணி வலுவான இந்திய பேட்டிங்கை குறைவான ரன்களில் கட்டுப்படுத்திவிட்டால், பாகிஸ்தான் வெற்றி பெறுவது நிச்சயம்” எனக் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் இஷான் கிஷான்.. இதற்கு முன் யார் யார்?

33 பந்துகளைச் சந்தித்து டக் அவுட்.. 10 வருடத்திற்கு பின் திரும்பிய வீரர் பரிதாப அவுட்..

பிரேமானந்த் ஆசிரமத்திற்கு ரூ.5 கோடியா? விராட் கோலி தரப்பு மறுப்பு!

ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

மீண்டும் ஐபிஎல் தொடரில் களம் குதித்த கங்குலி.. இனி நான் பார்வையாளன் இல்லை என பதிவு...

அடுத்த கட்டுரையில்
Show comments