புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 6 அக்டோபர் 2020 (12:42 IST)

ஏ.. 2020 உனக்கு இரக்கமே இல்லையா? பிரபல கிரிக்கெட் வீரர் பலி! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஆப்கானிஸ்தானின் பிரபல ஓப்பனிங் பேட்ஸ்மேனான நஜீப் தராகய் விபத்து ஒன்றில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் பிரபல கிரிக்கெட் வீரரான நஜீப் தராகய் கடந்த 2014ம் ஆண்டு முதலாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். இதுவரை 12 முறை டி20 போட்டிகளில் ஆப்கானிஸ்தானுக்கா விளையாடியவர்.

சமீபத்தில் சாலையை கடக்கும்போது கார் ஒன்று பயங்கரமாக மோதியதில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நஜீப் தராகய். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சில வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. விபத்துக்குள்ளானபோது கோமா நிலையை அடைந்தவர் அதிலிருந்து மீளாமலே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியாக ரசிகர்களுக்கு அமைந்துள்ளது.

சில நாட்கள் முன்னதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைபால் இறந்த நிலையில், நஜீப் மரணம் ரசிகர்களுக்கு மேலும் வேதனையை அளித்துள்ளது.