1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
Written By
Last Modified: வியாழன், 26 செப்டம்பர் 2024 (15:28 IST)

சேலையில் ஜொலிக்கும் ஷிவானியின் லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக தன்னுடைய டீனேஜ் வயதிலேயே அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில சீரியல்களில். சீரியலில் ஹோம்லியாக நடித்தலௌம் இன்ஸ்டாகிராமில் டான்ஸ் , கவர்ச்சி புகைப்படம் என தொடர்ந்து பதிவிட்டு  பிரபலமானார்.

இன்ஸ்டாகிராமில் அவரின் பக்கத்தில் இளசுகள் கூடி கும்மியடிக்க, வைரல் போட்டியாளர்களை தேடிக் கொண்டிருந்த பிக்பாஸ் அவரை அலேக்காக தூக்கிச் சென்றார். அங்கு பல நாட்கள் இருந்த ஷிவானி வெளியே வந்ததும் ஹீரோயினாக வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்திருப்பார். ஆனால் நடந்ததோ சோகம்.

கமல்ஹாசனின் விக்ரம் உள்ளிட்ட சில படங்களில் துணை வேடங்களில் தலைகாட்டியதோடு சரி.  பம்பர் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தாலும், அந்த படம் பெரிதாக வெற்றியடைடவில்லை. ஆனாலும் மனம் தளராத ஷிவானி இன்ஸ்டாகிராமில் வரிசையாக படங்களை இறக்கி வாய்ப்புக்காக வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறார். அந்த வகையில் இப்போது மாடர்ன் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.